நான் பீ.ஜி முடிச்சிட்டு (ங்கொய்யாலே நம்பவா போறீங்க? ) சென்னைல வேலைக்கு சேர்ந்த புதுசு....... ஒரு வருஷம் தான் ஆகிருந்துச்சு ............ ஃபாரின் ரெக்ரூட்டிங் டிராவல்ஸ் அது .....சவுதி விசா ஸ்டாம்பிங் பன்றதுக்காக சிலபேர் அடக்கடி மும்பை , டெல்லி , கொச்சின்னு பிளைட்டுல சுத்திக்கிட்டே இருப்பாங்க . பிளைட்டுல போற வேலைக்கு சீனியர் ஸ்டாப்ஸ்ச மட்டும் தான் அனுப்புவாங்க .
எங்களுக்கு வயிறு எரியும்.எங்களையெல்லாம் பஸ்லையும், டிரைன்லையும் போற வேலைக்குதான் அனுப்புவானுக, அதுவும் அவசரம் டிக்கட் கிடைக்கலைன்னு அன்-ரிசர்வுடுல தான் அனுப்புவானுக .
ஒரு நாள் அப்படித்தான் டெல்லிக்கு போகவேண்டிய சீனியர் ஒருவருக்கு உடம்பு சரியில்லாம போச்சு . வேற ஆளும் கிடைக்கல .....மேனேஜெர் என்னைய கூப்ட்டு நீ டெல்லிக்கு போறியான்னு கேட்டார் .
எனக்கு ஒரே சந்தோசம் , பஸ்ட்டு டைம் பிளைட்டுல போறதுன்னா சும்மாவா .... ....ஆனா.....
"இல்லை சார் நான் போகலை ."
"ஏன் போகல ? டேய் பிளைட்டுல போரடா நீ "
"இல்லை வேணாம் சார் "
மேனேஜர் நேரா எம்.டி ரூமுக்கு போனார் . எனக்கு பக்குன்னுச்சு .நான் நினைச்ச மாதிரியே எம்.டி கிட்ட இருந்த அழைப்பு வந்தது ........அவரு ரூமுக்கு போனேன்
"ஏம்பா , டெல்லிக்கு போயேன் "
"இல்லை சார் , வேணாம் "
"பிளைட்டுல எல்லாம் ஒன்னும் பயம் இல்லை சும்மா போயிட்டு வா "
"இல்லைங்க சார் , நான் போகலைங்க சார் "
எம்.டி டென்சன் ஆகி கத்த ஆரம்பிச்சுட்டார் ,
"நீ இப்போ , போறியா இல்லையா ?"
"இல்லை சார் , நான் போகலை "
"யோவ் , ஏன்யா போகலை ?"
"அது வந்து ............ என்கிட்ட பாஸ்போர்ட் இல்லைங்க சார் "
என்னது டெல்லிக்கு போக பாஸ்போர்ட்ஆ...........
அன்னைக்கு போனவருதான் அந்த எம்.டி ...அதுக்கப்புறம் அவரு ஆபீஸ் பக்கம் வரவே இல்லை .
ஏன் சார் , அப்போ சென்னைல இருந்து டெல்லிக்கு போக பாஸ்போர்ட் தேவையில்லையா ??? பிளைட்டுல எங்க போகனுமின்னாலும் பாஸ்போர்ட் வேணுன்னு நினைச்சு இருந்தேன் ............
டிஸ்கி : இப்ப தெரியுதா நான் ஏன் படிச்சிருக்கேன் , படிச்சிருக்கேன்னு சொல்றேன்னு.
கிஸ்கி : ஹி.ஹி.ஹி.............இது உண்மையிலே நடந்ததுங்க .........எம்.டி. வரைக்கும் போகலை மேனேஜெர் லெவல்லே முடிஞ்சிருச்சு ..ஹி,ஹி,ஹி..........
கிஸ்கி : ஹி.ஹி.ஹி.............இது உண்மையிலே நடந்ததுங்க .........எம்.டி. வரைக்கும் போகலை மேனேஜெர் லெவல்லே முடிஞ்சிருச்சு ..ஹி,ஹி,ஹி..........